Published : 25 Jun 2024 08:48 AM
Last Updated : 25 Jun 2024 08:48 AM

ரூ.1 லட்சம் பரிவர்த்தனைக்கு  ரூ.1,000 கமிஷன் பெறுவதற்காக வங்கி கணக்கை வாடகைக்கு விடும் இளைஞர்கள் @ கோவா

பனாஜி: வேலை இல்லாத பல இளை ஞர்கள் தங்களது வங்கிக் கணக் குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது கோவா போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கிடைத்த தகவல்கள் குறித்து கோவா போலீஸார் பகிர்ந்து கொண்டதாவது: சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடிக் கும்பல் அவர்களை ஏமாற்றி வருகிறது. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக வங்கிக் கணக்குகளை இதுபோன்ற மோசடி கும்பலுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு வங்கிப் பரிவர்த்தனைக்கும் அந்த மோசடி கும்பல் ரூ.1,000-த்தை கமிஷனாக வழங்குகிறது. காசோலை புத்தகம் உட்பட வங்கிக் கணக்கின் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் வைத்திருப்பதை அந்த மோசடி கும்பல் உறுதி செய்து கொள்கிறது.

சில சமயங்களில் மோசடி பேர்வழிகள் வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை அவர்களையே திரும்பப் பெறச் சொல்கின்றனர். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் தனது கமிஷனை எடுத்துவிட்டு மீதித் தொகையை மோசடியாளரிடம் வழங்கிவிடுகின்றனர்.

சியோலிம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் ரூ.45 லட்சத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்ததாக கொடுத்த புகாரினை விசாரித்தபோது 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பல இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்த தொகை மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

எதுவும் தெரியவில்லை ஆனால், அந்த இளைஞர்களுக்கு தங்கள் கணக்கில் யார் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள், எந்த இடத்திலிருந்து செய்கிறார்கள், மோசடி பணமாஎன்பது குறித்து எந்த தகவலும் தெரியாது.

சமீபத்தில் பனாஜியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை தருவதாக கூறி ரூ.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது. அதே போல நகை வியாபாரி ஒருவரிடம் ரூ.2.5 கோடி சுருட்டப்பட்டது. அவர்களின் பணம் அனைத்தும் ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களின் வங்கிக் கணக்குகளில் போட்டு இணைய மோசடிக் கும்பலுக்கு மாற்றப்பட்டது.

மோசடிக்கு துணை: எனவே, இளைஞர்களும் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற சட்டவிரோத மோசடிக்கு துணைபோய் அவர்களும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுகின்றனர். எனவே, முன்பின்தெரியாத நபரிடம் வங்கிக் கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. மோசடி நபர்கள் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இதுகுறித்து காவல் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x