Published : 24 Jun 2024 06:19 AM
Last Updated : 24 Jun 2024 06:19 AM

கட்சி அலுவலகத்துக்காக 42 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 33 ஆண்டுகளுக்கு குத்தகை: ஜெகன் ஆட்சியின் முறைகேடுகள் அம்பலம்

அமராவதி: ஜெகன் ஆட்சியின் போது, தனது சொந்த கட்சி அலுவலகத்துக்காக ஆந்திர மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 42 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஒவ்வொன்றும் அரண்மனை போல்கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மாதம் ரூ.1,000 மட்டுமே வாடகைநிர்ணயிக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்கு குத்தகையும் போடப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகிஉள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஜெகன் ஆட்சியில் செய்த பல முறைகேடுகள் தினமும் வெளியே வந்த வண்ணம் உள்ளன. இதில்,ஜெகன் தனது ஒய்.எஸ்.ஆர்காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகங்கள் கட்ட அரசு நிலங்களை 26 மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிவழங்கி உள்ளதும் தெரியவந்தது.

அதன்பேரில் ஆந்திர மாநிலம்முழுவதும் 26 மாவட்டங்களில் 42 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத் தப்பட்டு, அவைகளுக்கு மாத வாடகை வெறும் ரூ.1,000 மட்டுமேசெலுத்தும் வகையில் 33 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குண்டூர் தாடேபல்லி கூடத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை கட்சி அலுவலகத்துக்கு இதேபோன்று, மொத்தம் 17 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில், 2 ஏக்கரில் மிகப்பெரிய கட்சி அலுவலகத்தை கட்டியுள்ளனர். புகாரின் பேரில் அக்கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது.

இது குறித்து ஐடி துறை அமைச்சர் லோகேஷ் நேற்று சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில் அவரது ஆட்சியில் அதிகாரத்தை பயன் படுத்தி 42 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கட்சி அலுவலகங்கள் ஒவ்வொன்றையும் அரண்மனை போல ஜெகன் கட்டி வருகிறார். இந்த நிலங்களை 4,200 ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்து இருக்கலாம். நீங்கள் வசிக்க விசாகப்பட்டினத்தில் மக்கள் பணத்தில் ரூ.500 கோடிக் கும் மேல் செலவு செய்து 7 சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளீர்கள். இந்த பணத்தில் 25 ஆயிரம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாம். உங்களுடைய பணத்தாசைக்கும், சொத்து ஆசைக்கும் ஒரு அளவே இல்லையா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x