Published : 21 Jun 2024 04:54 AM
Last Updated : 21 Jun 2024 04:54 AM
மும்பை: மும்பையில் உள்ள ஐஐடி.யில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிகழ்த்துக் கலை விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிலர் சேர்ந்து, ‘ராகோவன்’ என்ற பெயரில் நாடகம் நடத்தினர். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் நாடகத்தில் நடித்தனர். ஆனால், இந்து மத நம்பிக்கைகளையும், இந்துக் கடவுள்களையும் இழிவுப்படுத்தும் வகையில் நாடகம் நடத்தியதாக மற்றொரு பிரிவு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து கடந்த மே 8-ம் தேதி ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, 4 மாணவர்களுக்கு தலா ரூ.1.2 லட்சம், மற்ற 4 மாணவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மூத்த மாணவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தடை செய்யப்பட்டன. ஜூனியர் மாணவர்களுக்கு விடுதி வசதியும் ரத்து செய்யப்பட்டது. இந்தஅபராத தொகையை ஜூலை 20-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்று மும்பை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT