Last Updated : 19 May, 2018 03:12 PM

 

Published : 19 May 2018 03:12 PM
Last Updated : 19 May 2018 03:12 PM

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்

விஷ்ணுவிம் 10வது அவதாரமான கல்கி அவதாரம் நானே என்றும் இதனால் அலுவலகத்துக்கு வரமாட்டேன் என்றும் குஜராத் அரசு அதிகாரி ஒருவர் கூறிவருவது பரபரப்பாகியுள்ளது.

‘உலக மனசாட்சியை மாற்றப்போகிறேன், அதற்காக வீட்டில் நோன்பு இருக்கிறேன்’ என்கிறார் குஜராத் அரசு அதிகாரி ரமேஷ் சந்திர ஃபிபார். இவர் சர்தார் சரோவர் புனர்வஸ்வத் ஏஜென்சியில் கண்காணிப்புப் பொறியாளர் பதவி வகிப்பவராவார்.

“பிரபஞ்சத்தின் 5வது பரிமாணத்துக்குள் நுழைந்து உலக மனசாட்சியை மாற்றுவதற்காக வீட்டில் தவம் செய்து வருகிறேன், எனவே இதனை நான் அலுவலகத்திலிருந்து செய்ய முடியாது” என்று இவர் அரசு அனுப்பிய நோட்டீஸுக்குப் பதில் அளித்துள்ளார்.

மேலும் தன்னால்தான் நாட்டில் மழையே பெய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8 மாதங்களில் இவர் 16 நாட்கள்தான் அலுவலகம் வந்துள்ளார், இதனையடுத்தே அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் தான் கூறியதை நம்ப மாட்டார்கள் என்று தெரிந்திருக்கும் இவர், தானே கல்கி அவதாரம் என்பதை விரைவில் நிரூபிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையும் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கான பதிலில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சந்திரா, 2010-ல் தான் கல்கி அவதாரம் என்பதை உள்ளுணர்வில் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

50 வயதான இவர் மேலும் கூறும்போது, “அலுவலகத்தில் என்னை சும்மா உட்கார விரும்புகிறார்களா அல்லது நாட்டை வறட்சியிலிருந்து நான் காப்பாற்ற வேண்டுமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யட்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x