Published : 13 Jun 2024 04:44 AM
Last Updated : 13 Jun 2024 04:44 AM
புதுடெல்லி: டெல்லியில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் நிறுவனம் சார்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்ற ரூ.69 கோடி கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார்.
இவர் கடன் வாங்கிய நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த தவறியதையடுத்து, உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் வங்கி அவருக்கு எதிராக லுக் - அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது.
இதை எதிர்த்து அந்த இயக்குநர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணையின்போது நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
தற்போதைய வழக்கில், மனுதாரருக்கு எதிராக எந்த குற்றவியல் நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லை. அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுகளும் இல்லை. மனுதாரர் உத்தரவாதமளித்த கடன்களை அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்த இயலாமையால் மட்டுமே மனுதாரருக்கு எதிராக லுக் - அவுட் சுற்றறிக்கைபிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் ஒருவருக்குவங்கியின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய தடையை ஏற்படுத்தி விடுகிறது. மேலே கூறிய அம்சங்களை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் - அவுட் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT