Published : 02 May 2018 04:50 PM
Last Updated : 02 May 2018 04:50 PM
காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐசெய்தி நிறுவனம், ”தெற்கு காஷ்மீரில் ஷோபியன் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) 50 மாணவர்களுடன் ( நான்கு வயது நர்சரி மாணவர்களும் அடக்கம்) சென்ற பள்ளி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் காயம் அடைந்த மாணவர் ஒருவரின் தந்தை கூறும்போது, ”எனது மகன் தாக்கப்பட்டுள்ளான். இது மனிதாபிமானமற்றது" என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான பேருந்து வானிலை சர்வதேச பள்ளியை சேர்ந்தது. கல் எறிந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT