Published : 10 Jun 2024 08:08 PM
Last Updated : 10 Jun 2024 08:08 PM

அமித் ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை?

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்:

  • பிரதமர் மோடி - மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை
  • ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை
  • அமித் ஷா - உள்துறை
  • நிதின் கட்கரி - மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
  • ஜெ.பி.நட்டா - சுகாதாரத் துறை
  • சிவராஜ் சிங் சவுகான் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை
  • நிர்மலா சீதாராமன் - நிதித் துறை
  • எஸ்.ஜெய்ஷங்கர் - வெளியுறவுத் துறை
  • மனோகர் லால் கட்டார் - வீட்டுவசதி மற்றும் மின் துறை
  • ஹெச்.டி.குமாரசாமி - கனரக தொழில் துறை
  • பியூஷ் கோயல் - தொழில் மற்றும் வர்த்தகத் துறை
  • தர்மேந்திர பிரதான் - கல்வித் துறை
  • ஜித்தன் ராம் மாஞ்சி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
  • ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம் மற்றும் பால்வளத் துறை
  • சர்பானந்த சோனோவால் - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை
  • வீரேந்திர குமார் - சமூக நீதித் துறை
  • ராம்மோகன் நாயுடு - விமானப் போக்குவரத்து துறை
  • பிரகலாத் ஜோஷி - நுகர்வோர் விவகாரங்கள், உணவுத் துறை
  • ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத் துறை
  • கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை
  • அஷ்விணி வைஷ்ணவ் - ரயில்வே துறை
  • பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை
  • ஜோதிராதித்ய சிந்தியா - தகவல் தொழில்நுட்பத் துறை
  • கஜேந்திரசிங் ஷெகாவத் - சுற்றுலா மற்றும் கலாச்சார துறை
  • கிரண் ரிஜிஜூ - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை
  • அன்னபூர்ண தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
  • ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியத் துறை
  • மன்சுக் மாண்டவியா - தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் துறை
  • கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கள் துறை
  • சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்துதல் துறை
  • சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி துறை

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) விவரம்: இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர்

  • ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலக இணை அமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர்; அணுசக்தித் துறை இணை அமைச்சர்; விண்வெளித் துறை இணை அமைச்சர்
  • அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
  • ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் - ஆயுஷ் அமைச்சகம் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
  • ஜெயந்த் சவுத்ரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); கல்வித் துறை இணை அமைச்சர்

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர்கள் பட்டியல்:

  • ஜிதின் பிரசதா - வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்
  • ஸ்ரீபத் யசோ நாய்க் - மின் துறை இணை அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர்
  • பங்கஜ் சவுத்ரி - நிதித் துறை இணை அமைச்சர்
  • கிருஷ்ணன் பால் - கூட்டுறவு இணை அமைச்சர்
  • ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
  • ராம்நாத் தாக்கூர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர்
  • நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள் இணை அமைச்சர்
  • அனுப்ரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர்
  • வி.சோமன்னா - ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர்
  • சந்திர சேகர் பெம்மாசனி - ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர்
  • எஸ்.பி. சிங் பாகல் - மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர்
  • ஷோபா கரந்த்லாஜே - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர்
  • கிர்த்திவர்தன் சிங் - சுற்றுச்சூல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
  • பி.எல்.வர்மா - உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
  • சாந்தனு தாக்கூர் - துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அஜய் தம்டா - சாலைப் போக்குவர்தது மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர்
  • பண்டி சஞ்சய் குமார் - உள்துறை விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
  • கம்லேஷ் பஸ்வான் - ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர்
  • பகிரத் சவுத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்
  • சதீஷ் சந்திர தூபே - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணை அமைச்சர்
  • சஞ்சய் ஷேத் - பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்
  • ரவ்னீத் சிங் - உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை மற்றும் ரயில்வே இணை அமைச்சர்
  • துர்காதாஸ் உய்கி - பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர்
  • ரக்‌ஷா நிகில் கட்சே - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர்
  • சுகுந்தா மஜூம்தார் - கல்வி மற்றும் வட கிழக்கு மாகாண மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
  • சாவித்ரி தாக்கூர் - பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
  • தோஹன் சாஹூ - வீட்டு வளர்ச்சி ஊரக விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
  • ராஜ் பூஷண் சவுத்ரி - ஜல் சக்தி துறை இணை அமைச்சர்
  • பூபதி ராஜூ ஸ்ரீநிவாச வர்மா - கனரக தொழிற்சாலைகள் மற்றும் இரும்புத் துறை இணை அமைச்சர்
  • ஹர்ஷ் மல்ஹோத்ரா - கர்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர்
  • நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா - நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர்
  • முர்ளிதர் மோஹல் - கூட்டுறவு மற்றும் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர்
  • ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்
  • பபித்ரா மர்கேரிடா - வெளியுறவு விவகாரங்கள் மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x