Published : 09 Jun 2024 08:28 PM
Last Updated : 09 Jun 2024 08:28 PM
புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் நரேந்தி மோடி. அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர்.
நிர்மலா சீதாராமன்: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2019-ல் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர். செப்டம்பர் 2017 முதல் மே 2019 வரையில் மோடியின் முதல் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த 2014-ல் பிரதமர் மோடி ஆட்சி அமைத்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2014, 2016 மற்றும் 2022-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT