Published : 08 Jun 2024 04:44 AM
Last Updated : 08 Jun 2024 04:44 AM

ஜெகனுக்கு நெருக்கமான 3 அதிகாரிகள் இடமாற்றம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற நீரப் குமார் பிரசாத் பணியில் அமர்த்தப்பட்ட முதல் நாளிலேயே ஜெகனுக்கு நெருக்கமான 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த ஜவஹர் ரெட்டிக்கு புதிய அரசு விடுப்பு கொடுத்து அனுப்பியது.

அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலராக ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த நீரப் குமார் பிரசாத் நியமனம் செய்யப்பட்டார்.

இவர் 1987-ம் ஆண்டில் ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர். நேற்று காலை இவர் பதவியேற்றார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அலுவலகத்தில் இதுவரை பணியாற்றி வந்த பூனம் மாலகொண்டய்யா, நாராயண பரத் குப்தா, முத்தியால ராஜு ஆகிய மூவரும் உடனடியாக பொது நிர்வாக துறையில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை செயலாளர் ஜவஹர் ரெட்டி, ஜெகன்மோகன் அரசின் கைப்பாவையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x