Published : 07 Jun 2024 04:47 AM
Last Updated : 07 Jun 2024 04:47 AM

சீன விசா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்

புதுடெல்லி: வேதாந்தா குழுமத்தின் தல்வாண்டி சபோ பவர் நிறுவனம் பஞ்சாபில் கடந்த 2011-ல் சீன நிறுவனத்தின் உதவியுடன் மின் உற்பத்தி மையத்தை நிறுவியது. அந்தப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே 263 பணியாளர்களின் விசா காலம் முடிவடைந்தது.

அவர்களின் விசா காலத்தை நீட்டிக்க அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக 2022-ம் ஆண்டு சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தன.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கார்த்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதனை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா கார்த்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x