Published : 07 Jun 2024 06:18 AM
Last Updated : 07 Jun 2024 06:18 AM

மக்களவை தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற 280 எம்.பிக்கள்

புதுடெல்லி: மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 267 எம்பிக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களாக கருதப்பட்டது.

தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் எம்பி பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். மற்றுமொரு எம்பி ஏற்கெனவே மக்களவையில் ஏழு முறை பதவி வகித்தவர். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களில் 8 பேர் தங்களது முந்தைய தொகுதியிலிருந்து மாறுபட்டு புதிய தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஒருவர் இரண்டாம் முறையாக இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

இதுதவிர கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சியிலிருந்து விலகி கட்சித்தாவல் செய்து இம்முறை வெற்றி பெற்று எம்பியானவர்கள் ஒன்பது பேர். கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்து இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 53 பேரில் 35 பேர் வாகை சூடியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x