Published : 05 Jun 2024 08:34 AM
Last Updated : 05 Jun 2024 08:34 AM

கேரளத்தில் பாஜகவின் முதல் எம்.பி. - யார் இந்த சுரேஷ் கோபி?

நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றியின் மூலமாக கேரள மாநிலத்தில் பாஜக முதன்முதலாக கால்பதித்துள்ளது. கேரளாவின் ஆலப்புழாவில் ஜூன் 1958-ல் பிறந்தவர் சுரேஷ் கோபி. விலங்கியல் துறையில் இளங்கலை அறிவியல் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் ஒரு சிறந்த மலையாள நடிகர், பின்னணிப் பாடகரும் ஆவார்.

ஷாஜி கைலாசின் தலஸ்தானத்தில் (1992) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுரேஷ் கோபி மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். 1998-ல் காளியாட்டம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், கேரள மாநில விருதையும் வென்றவர்.

அரசியல் வாழ்க்கை: 2016 அக்டோபரில் பாஜகவில் சேர்ந்தார். 2019 தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பிரதாபனிடம் தோல்வி கண்டார். 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ் கோபிக்கு வாய்ப்பு வழங்கியதன் மூலம் கேரள மாநிலத்தில் பாஜக முதல்முறையாக தனது தடத்தை பதித்துள்ளது. 2016 முதல் 2022 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் சுரேஷ் கோபி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x