Published : 03 Jun 2024 06:04 PM
Last Updated : 03 Jun 2024 06:04 PM
டெல்லி: துக்ளகாபாத் - ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் இன்று மாலை தீப்பிடித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, "தீ விபத்தில் இதுவரை பயணிகள் யாருக்கும் காயமோ, பாதிப்புகளோ இல்லை. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த பிசிஆர் அழைப்பு மாலை 4.41 மணிக்கு வந்தது. தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு சென்றதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை அணைக்க, ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என ரயில்வே டிசிபி தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi: Fire being extinguished by firefighters after two coaches of Taj Express caught fire between Tughlakabad-Okhla. All passengers are safe
(Source: Delhi Fire Service) https://t.co/xo2NiT2BSw pic.twitter.com/NEcBkY2w5b— ANI (@ANI) June 3, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT