Last Updated : 02 Apr, 2018 08:48 PM

 

Published : 02 Apr 2018 08:48 PM
Last Updated : 02 Apr 2018 08:48 PM

என்கவுண்ட்டர் பீதி: உ.பி.யில் குற்றவாளிகள் சரண் படலம்; கையெழுத்திட்டு காவல் நிலையத்திலேயே உறக்கம்

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் காவல்துறையின் ‘கையை அவிழ்த்து’ விட்டதில் மார்ச் 2017 முதல் ஜனவரி 2018 வரை மட்டுமே 1,144 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து பயந்து நடுங்கும் தாதாக்கள், ரவுடிகள், திருடர்கள், தேடப்படும் குற்றவாளிகள் தாங்களாகவே காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் குற்ற வாழ்க்கையை கைவிட்டு நேர்மையான வாழ்க்கையை மேற்கொள்ளவிருப்பதாக காவலர்களிடம் கூறிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச சீதாப்பூரில் உள்ள லாஹர்பூர் கோட்வாலி காவல்நிலைய உயரதிகாரி ஆனந்த் குல்கர்னி இந்தச் செய்தியை உறுதி செய்ததோடு ஆங்கில ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, “காவல்நிலையத்துக்கு தாங்களாகவே வந்து தங்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு, காவல்நிலையத்திலேயே சில குற்றவாளிகள் தூங்கவும் செய்தனர்” என்றார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் மேலும் கூறும்போது, இனி ஒருபோதும் குற்றச்செய்ல்களில் ஈடுபடப்போவதில்லை என்று குற்றவாளிகள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

சுமார் 20 கிரிமினல்கள் இவ்வாறு கூறியிருப்பதாக ஆனந்த் குல்கர்னி தெரிவித்தார்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம். யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பிறகு “அதிகரிக்கும் குற்றங்களுக்கு எதிராக காவல் துறைக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கப்போகிறேன். அதே உரையில் கிரிமினல்கள் ஒன்று சரணடையுங்கள் அல்லது மாநிலத்தை விட்டு வெளியேறி விடுங்கள் என்று எச்சரித்ததும் அப்போது செய்தியானது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவது என்னவெனில், “குற்றவாளிகளுக்கு இப்போதுதான் போலீஸ் என்றால் பயம் வந்துள்ளது.. சட்டத்தை மதிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தாங்களாகவே வந்து சரணடைந்து ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு, வாழ்க்கைமுறையை மாற்றி கொள்வதாக உறுதி அளித்து வருகின்றனர்” என்பதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x