Published : 02 Jun 2024 11:46 AM
Last Updated : 02 Jun 2024 11:46 AM

2014, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் என்ன கூறின? - 2024ல் என்னவாகும்?

மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றுடன் முடிவடைந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நேற்று மாலை 6:30 மணியிலிருந்து வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவரத் தொடங்கின.

பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முன்னதாக முடிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்தது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம்:

இந்நிலையில், கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலின் போது சி-வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, டுடேஸ் சாணக்கியா, ஐபிஎஸ்ஓஎஸ், சிடிசிஎஸ் உள்ளிட்ட இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் முக்கிய முகமைகள் வெளியிட்ட முடிவுகள் எவ்வளவு தூரம் உண்மையான தேர்தல் முடிவுடன் ஒத்துப்போயின என்று பார்க்கலாம்.

2014 வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. ஆனால், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அதை துல்லியமாகக் கணிக்கத் தவறின. கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 இடங்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 105 இடங்களும் வெற்றி பெறக்கூடம் என்றே கணிக்கப்பட்டது. உண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களும் அதில் பாஜக மட்டுமே 282 இடங்களை வென்று மகத்தான வெற்றி கண்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோ வெறும் 60 இடங்களை வென்றது அவற்றில் காங். 44 இடங்களை மட்டுமே கைபற்றியது.

2019 வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்துக் கணிப்பு: 2014 உடன் ஒப்பிடுகையில் 2019 கருத்துக் கணிப்பு ஓரளவு தேர்தல் முடிவுக்கு நெருக்கமாக அமைந்தது. இருப்பினும் வித்தியாசம் இருக்கவே செய்தது. தேசிய ஜனநாயகக் கூட் டணி 306 இடங்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 120 இடங்களும் வெல்லும் என்றுகணிக் கப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களை தட்டிப்பறித்தது. அவற்றில் 303ஐ பாஜக மட்டுமே வென்று காட்டியது. மறுபுறம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 93 இடங் களும் அதில் காங், 52 இடங்களை பெற்றது.

2024 தேர்தல் முடிவு என்ன? - 2024 மக்களவை தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் நடைபெறவில்லை. இண்டியா கூட்டணி எனும் எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி மோதுகிறது. தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம், 400 இடங்களை வெல்லும் அதில் 370 பாஜகவின் வெற்றிக் கனிகள் என்று பிரதமர் மோடி சவால் விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x