Published : 23 Apr 2018 05:08 PM
Last Updated : 23 Apr 2018 05:08 PM
நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாகப் பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகள் சேர்ந்து குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடுவிடம் கடந்த வெள்ளிக்கிழமை அளித்தன. அந்த நோட்டீஸ் குறித்து சட்டவல்லுநர்களுடன் தீவிரமான ஆலோசனைகளும். ஆய்வும் செய்த வெங்கைய்ய நாயுடு அந்த நோட்டீஸை இன்று தள்ளுபடி செய்தார்.
நாட்டில் இப்போது இந்த நிகழ்வுதான் மிகுந்த பரபரப்பையும், எடுத்த என்ன நிகழ்வுகளை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஒருவேளை இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிகாரவே தாக்கல் செய்தால், அதை யார் விசாரிப்பது, தலைமை நீதிபதி பதவி விலகுவாரா, விசாரணை எதிர்கொள்வாரா என்ற கேள்விகள் அனைவரும் முன் இருக்கின்றன.
இதற்கு முன் நீதிபதிகளுக்கு எதிராகப் பதவிநீக்கம் செய்யக் கோரும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்தாலும், பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக இப்போதுதான் முதல்முறையாக அளிக்கப்பட்டுள்ளது.
தர்மசங்கடமான சூழலையும் தலைமை நீதிபதி எதிர்கொண்டுள்ளார். இந்த பதவிநீக்கத் தீர்மான நோட்டீஸால் நீதிபரிபாலான முறையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்குமுன் நடந்த 4 பதவிநீக்கத் தீர்மானங்களில் மூன்று காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்ததது. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
எதற்காக இந்த பதவிநீக்கத் தீர்மான நோட்டீஸ்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 விதமான தவறான நடத்தைகள் குறித்து குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதுமட்டுமல்லாமல், சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரணை செய்த நீதிபதி லோயா மரண வழக்கில் சுதந்திரமான விசாரணை தேவை எனத் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பல மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. அதன்பின் தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக்கோரும் நோட்டீஸ் அளிக்கும் முடிவு தீவிரமாக யோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் இணைந்து குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளன.
இதற்கு முன்?...
நீதிபதிகளைப் பதவிநீக்கம் செய்யக்கோரும் நோட்டீஸ் முதல் முறையாக நடக்கவில்லை, இதற்கு முன் நீதிபதி ராமசாமி, நீதிபதி சி.வி.நாகர்ஜூனா ரெட்டி, நீதிபதி சவுமித்ரா சென், பி.டி. தினகரன், ஜே.பி. பர்திவாலா ஆகியோர் மீது கொண்டுவரப்பட்டு அது நிறைவேறுவதற்கு முன்பாகவே அவர்களாகவே பதவி விலகிவிட்டார்கள்
பதவிநீக்கம் செய்ய நடைமுறை என்ன?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளைப் பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் ஆதரவு 50 பேரின் கையொப்பம் இருக்க வேண்டும் அல்லது மக்களவை எம்.பி.க்கள் 100பேரின் கையொப்பமும் ஆதரவும் இருக்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள நோட்டீஸ்க்கு 64 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது.
சபாநாயகர் அல்லது மாநிலங்கள்அவைத்தலைவர்
இந்த நோட்டீஸை மாநிலங்கள் அவைத் தலைவர், குடியரசு த்துணைத்தலைவரிடம் அளிக்க வேண்டும். ஒருவேளை மக்களவைத் எம்.பி.க்களாக நோட்டீஸ் அளித்தால் சபாநாயகரிடம் அளிக்க வேண்டும்.
3 பேர் கொண்ட குழு
அதன்பின், அவர் அதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதிகள் 3 பேரிடம் இந்தப் பதவிநீக்க தீர்மான நோட்டீஸை அளித்து விசாரணை நடத்தக்கூறுவார். அந்த 3 நீதிபதிகளில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சிறப்புவாய்ந்த புகழ்பெற்ற நீதிபதி ஒருவர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள்.
அவர்கள் தலைமைநீதிபதியிடம் விசாரணை நடத்தி அதில் மாநிலங்கள் அவைத்தலைவரிடம் அறிக்கை அளிப்பார்கள். அதில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர் அதை நாடாளுமன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு செல்வார் அல்லது நிராகரிக்கும் உரிமையும் உண்டு.
நாடாளுமன்றத்தில் விவாதம்
ஒருவேளை நாடாளுமன்றத்துக்குத் தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில் இது குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடக்கும். இந்த விவதாதத்தில் மக்களவையில் மூன்றில் இரு பங்கு எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதன்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும். அதை அவர் பரிசீலித்து அவர் பிறப்பிக்கும் உத்தரவுக்குப்பின் தலைமை நீதிபதி பதவி இழப்பார்.
இதற்கு முன் நடந்த மிகச்சில பதவிநீக்கத் தீர்மானங்கள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டவுடனே நீதிபதிகள் தானாகவே பதவி விலகிவிட்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT