Published : 02 Apr 2018 03:57 PM
Last Updated : 02 Apr 2018 03:57 PM
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஆதரவான சட்டப் பிரிவை நீக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் நாட்டில் கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் இதுகுறித்து கூறுகையில்,
‘‘பின்தங்கிய சமூகத்தை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை. இக்குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கிறேன்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் போராட்டத்தில் வன்முறை நடக்காமல் இருப்பதை அரசியல் கட்சிகள் உறுதிசெய்யவேண்டும்'' என்று தெரிவித்தார்.
தலித் வன்கொடுமை செய்ததாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்படுவதை தடை செய்வதற்கும், அரசு ஊழியரல்லாதவர்களைக் கூட எந்தவித சட்டபூர்வமான விசாரணைகள் செய்த பிறகே கைது செய்யப்பட வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம் எஸ்சி மற்றும் எஸ்டிக்கள் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்ததாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர்.
இத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தலித் அமைப்புகள் தேசிய அளவிலான பாரத் பந்துக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சிகள் கொண்டுள்ள தலித்துகள் நிலைப்பாட்டைக் குறைகூறியதுடன், மோடி அரசாங்கத்திடமிருந்து தங்கள் உரிமைகளை பாதுகாக்க கோரி தெருக்களுக்கு வந்து போராடும் ''தலித் சகோதரர்களையும் சகோதரிகளையும வணங்குவதாக'' அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், மத்திய அரசு என்பது ஒரு கட்சியை சார்ந்தது அல்ல. தவிர இப்பிரச்சினையில், மத்திய சமூக நீதிஅமைச்சகத்தின் சார்பாக, உச்ச நீதிமன்றத்தின் எஸ்சி/எஸ்டி சட்டம் நீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக மிக விரிவான சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT