Last Updated : 10 Apr, 2018 03:04 PM

 

Published : 10 Apr 2018 03:04 PM
Last Updated : 10 Apr 2018 03:04 PM

குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர் கைது

ஹைதராபாத்தில் குடும்ப தகராறில் மனைவியை, தீ வைத்து கொளுத்திய கணவன் கைது செய்ப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மல்லேஷ் கவுட் (53) என்பவர் குடும்ப தகராறில் தனது குழந்தைகளை ஒரு ரூமில் அடைந்துவிட்டு மனைவி மங்கம்மா மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறார்.

இதில் பலத்த காயம் அடைந்த மங்கம்மாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மங்கம்மா தொடர்த்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவரது உடலில் 80% காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் போலீஸார் தரப்பில் கூறுகையில் ‘‘மல்லேஷ் கவுட்டுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவி மங்கம்மாவை கொலை செய்யப் போவதாக கவுட் மிரட்டல் விடுத்திருக்கிறார். கவுட் மீது சட்டப் பிரிவு 307ன்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x