சரண் தொகுதி வன்முறை சம்பவம்: லாலுவின் மகள் ரோகிணி மீது வழக்கு

சரண் தொகுதி வன்முறை சம்பவம்: லாலுவின் மகள் ரோகிணி மீது வழக்கு

Published on

பிஹார் மாநிலம் சரண் தொகுதியில் கடந்த 20-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் காலை சரண் தொகுதிக்கு உட்பட்ட படா டெப்லா பகுதியில் வன்முறை வெடித்தது. வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாக பாஜக மற்றும் ஆர்.ஜே.டி. தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டது. இந்த மோதலின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் அதில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், பாஜகவைச் சேர்ந்த மனோஜ் குமார் போலீஸில் இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் கீழ் ரோகிணி ஆச்சார்யா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in