Published : 17 May 2024 10:49 PM
Last Updated : 17 May 2024 10:49 PM
ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது: நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ பிரதமரை அதை என்னால் பேச செய்யமுடியும்.
அதானி - அம்பானியின் பெயரை நரேந்திர மோடி உச்சரிக்கவே மாட்டார் என்று பேசினேன். அடுத்த இரண்டு நாட்களில் அதானி - அம்பானியின் பெயர்களை அவர் எடுத்தார். அதே போல வங்கிக் கணக்குகளில் நாங்கள் பணத்தை டெபாசிட் செய்வோம் ‘டக்கா டக்.. டக்கா டக்... டக்கா டக்.. என்று சொன்னால், மறுநாள் பிரதமர் மோடியும் ‘டக்கா டக்.. டக்கா டக்’ என்று தனது உரையில் குறிப்பிடுகிறார்.
நீங்கள் பிரதமர் என்ன பேசவேண்டும் என்று நினைக்கிறீர்களோ என்னிடம் சொல்லுங்கள். என்னால் அவரை இரண்டு நிமிடங்களில் பேசவைக்க முடியும். அவர் எதுவும் பேசவேண்டாம் என்று விரும்பினாலும் என்னிடம் சொல்லுங்கள்.
மோடி தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டார். நான் எழுதிவேண்டுமானாலும் தருகிறேன். ஜூன் 4-க்குப் பிறகு அவர் பிரதமராக நீடிக்கமாட்டார்” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசிக்க > ‘‘எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... அவர் ஏமாற்ற மாட்டார்’’ - சோனியா காந்தி @ ரேபரேலி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT