Published : 16 May 2024 12:13 PM
Last Updated : 16 May 2024 12:13 PM
ஜான்சி: உத்தர பிரதேச மாநில லாரி சங்க தலைவரான பகதூர் சிங் பரிஹார், கார் ஓட்டிச் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்கிறார். போக்குவரத்து காவலர்கள் விதிக்கும் அபராதத்தில் இருந்து தப்ப இந்த ஏற்பாடு என அவர் தெரிவித்துள்ளார். அது குறித்து பார்ப்போம்.
அண்மையில் தனது சொகுசு காரில் பகதூர் சிங் பயணித்த போது, அந்த மாநில போக்குவரத்து காவலர்கள் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். அது குறித்த தகவல் அவருக்கு போனில் மெசேஜ் வந்துள்ளது. உடனடியாக பரிவாஹன் தளத்தில் அதற்கான காரணம் குறித்து அவர் தேடிய போது ஹெல்மெட் அணியவில்லை எனக் குறிப்பிட்டு போலீஸார் அபராதம் விதித்துள்ளதை தெரிந்து கொண்டார்.
‘நான் காரில் பயணம் செய்தேன். பிறகு ஏன் ஹெல்மெட் அணிய வேண்டும்?’ என போலீஸாரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். எதுவாக இருந்தாலும் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என போலீஸார் அவரிடம் தெரிவித்துள்ளனர். அந்த விரக்தியின் காரணமாக கார் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். இது மேற்கொண்டு அபராதம் விதிக்க வழிவகுக்காது என்றும் சொல்லியுள்ளார்.
அவருக்கு வந்த சலானில் இருசக்கர வாகனத்தின் படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், வாகனத்தின் கேட்டகிரியில் ‘மோட்டார் கார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. போலீஸாரின் இந்த செயலால் அவருக்கு ரூ.1,000 நஷ்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT