Last Updated : 18 Apr, 2018 05:03 PM

 

Published : 18 Apr 2018 05:03 PM
Last Updated : 18 Apr 2018 05:03 PM

பெண்கள் செல்போன், ஜீன்ஸ் பயன்படுத்த தடை: ஹரியானா கிராமத்தில் ‘அடக்குமுறை’

ஹரியானா மாநிலத்தின் சோனிப்பட் மாவட்டத்தைச் சேர்ந்த இசாய்ப்பூர்கேதி கிராமப் பஞ்சாயத்து பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் ஓராண்டுக்குப் பிறகு இசாய்ப்பூர்  கிராம பஞ்சாயத்து சபை கூடி இதற்கான விதியை வகுத்துள்ளது.

ஏஎன்ஐ உடன் பேசிய கிராம தலைவர் பிரேம் சிங், இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதிலிருந்து, தேவையற்ற எந்த சம்பவங்களும் பிரச்சனைகளும் இல்லாமல் கிராமம் நன்றாக உள்ளது.

பெண்கள் ஜீன்ஸ் அணியவும் எங்கள் கிராமத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்போனை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கும் நாங்கள் தடைவிதித்துள்ளோம்.

இதனால் அவர்கள் கெட்டுப்போகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயங்கள் அவர்களுக்கு பொருத்தமாக இல்லை என்றுதான் சொல்கிறேன்.'' என்றார்.

இதற்கிடையில் இக்கிராமத்தின் பெண்கள் இப்படி விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்த்துள்ளனர்.

கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்து கூறும்போது, ''இந்த அடக்குமுறை முழுக்கமுழுக்க தவறு. இப்பிரச்சனை ஆண்கள் மனநிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட உடைகள் உடுத்துவதால் ஒரு பெண்ணின் நடத்தையை எப்படி மதிப்பிடுவீர்கள்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x