Last Updated : 06 Aug, 2014 09:33 AM

 

Published : 06 Aug 2014 09:33 AM
Last Updated : 06 Aug 2014 09:33 AM

நிலக்கரி ஊழலில் மேலும் 3 வழக்குகள் பதிவு

நிலக்கரி ஊழல் தொடர்பாக மேலும் மூன்று வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதன்மூலம், இதுதொடர்பான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள், கோப்பு கள் காணாமல் போனது உட்பட 24 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இதில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் உதவியாளரும் மாநிலங்களவை எம்பி-யுமான பிரேம்சந்த் குப்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விஜய் தர்தா, அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது மேலும் மூன்று வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. எஸ்கேஎஸ் இஸ்பாட் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குநர்கள் அனில் குப்தா, தீபக் குப்தா, நிலக்கரி ஒதுக்கீடு குறித்த பரிசீலனைக் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் சிலர் ஆகியோர் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூட்டு சதி, மோசடி, குற்றம் புரியும் வகையிலான தவறான நடத்தை ஆகிய பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், நிலக்கரி ஊழல் தொடர்பாக இதுவரை தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந் துள்ளது.

நிலக்கரி ஊழல் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட் டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x