Published : 24 Apr 2018 04:49 PM
Last Updated : 24 Apr 2018 04:49 PM
எல்லா பணியிடங்களிலும் நடப்பதுபோல நாடாளுமன்றத்திலும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சௌத்ரி கூறியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதாகவும் சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு பாலியல் வற்புறுத்தலை நியாயப்படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சரோஜ் கானின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சௌத்ரி, “நாடாளுமன்றத்திலும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பாலியல் ரீதியாக பெண்கள் வற்புறுத்தப்படுவதற்கு நாடாளுமன்றம் விலக்கல்ல. இது ஒரு கசப்பான உண்மை. எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுகின்றன. அதற்கு நாடாளுமன்றமோ, அல்லது வேறு எந்த பணியிடமோ விதிவிலக்கல்ல.
உலக அளவில் புகழ்பெற்ற நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #Metoo பிரச்சாரம் மூலம் வெளியில் பேச எவ்வளவு நீண்ட காலம் ஆகியிருக்கிறது. இப்போது, இந்தியாவிலும் அவ்வாறு பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் வற்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகக் கூற வேண்டிய தருணம் இது” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT