Published : 13 Apr 2018 08:08 AM
Last Updated : 13 Apr 2018 08:08 AM
நாடாளுமன்ற முடக்கத்தைக் கண்டித்து ஆந்திராவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பாஜக எம்பி, எம்எல்ஏ-க்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டத்தைக் கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உட்பட கட்சி எம்பி, எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் நாடு முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
அந்த வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்த போராட்டத்தில் பாஜக எம்பியும், மாநில பாஜக தலைவருமான ஹரிபாபு, எம்எல்ஏ-க்கள் விஷ்ணு குமார் ராஜு, முன்னாள் அமைச்சர் காமிநேனி ஸ்ரீநிவாச ராவ் ஆகியோர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பாஜகவினர் மீது கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் காலணி, தண்ணீர் பாக்கெட்டுகளை வீசினர். இதற்கு பதிலடியாக பாஜவினரும் அவர்கள் மீது காலணி்களை வீசி தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்துஅங்கு வந்த போலீஸார், தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். அதன் பிறகு, இரு பிரிவினரையும் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT