Published : 27 Apr 2024 05:08 PM
Last Updated : 27 Apr 2024 05:08 PM
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரியாணி சாப்பிட்ட 18 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் 8 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். அவர்கள் அனைவரும் பல்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிலருக்கு லேசான உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது; சிலருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பல்ராம்பூர் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், “உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் 8 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் நிலை சீராகவே உள்ளது. விரைவில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்” என்றார்.
சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மருத்துவமனையில் 70 பேர் உணவு ஒவ்வாமைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்யாண விருந்தில் உணவு உண்ட பின்னர் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து இதுபோல் உணவகங்கள், கல்யாண விருந்துகளில் தரமற்ற உணவுப் பொருட்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் உணவுத் துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT