Published : 24 Apr 2024 10:07 AM
Last Updated : 24 Apr 2024 10:07 AM
புவனேஸ்வர்: ஒடிசாவின் புரியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தனது பிரச்சாரத்தின் நடுவே நேற்று மயங்கி விழுந்தார். ஒடிசாவின் புரி மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சார்பில் மும்பை காவல் துறை முன்னாள் ஆணையர் அரூப் பட்நாயக் போட்டியிடுகிறார்.
அவர் புரி தொகுதியின் பிபிலி பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். பிபிலி எம்எல்ஏ ருத்ர மகாரதியுடன் அவர் திறந்த ஜீப்பில் காலை 11 மணியளவில் அவர் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடும் வெயிலை தாங்க முடியாமல் அரூப் பட்நாயக் திடீரென மயங்கி விழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியினர் உடனடியாக அவரை அருகில் உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர். அவரது ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து காணப்பட்டதால் . அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு புவனேஸ்வர் கேபிடல் மருத்துவமனையில் பட்நாயக் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளாாக அறிவித்த மருத்துவர்கள் சில மணி நேரத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment