Published : 24 Apr 2024 09:49 AM
Last Updated : 24 Apr 2024 09:49 AM
புதுடெல்லி: குஜராத்தின் சூரத் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் தலால், காங்கிரஸ் சார்பில்நிலேஷ் கும்பானி உட்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர். அந்த தொகுதியில் வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும்.
இந்த சூழலில் பகுஜன் சமாஜ்வேட்பாளர் பியாரிலால் பாரதிஉட்பட 4 கட்சிகளின் வேட்பாளர்களும் 4 சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவைவாபஸ் பெற்றனர்.
வேட்புமனு பரிசீலனையின்போது காங்கிரஸ்வேட்பாளர் நிலேஷ் கும்பானியின்பிரமாண பத்திரத்தில் தவறுகள்இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ்சார்பில் நேற்று புகார் தெரிவிக்கப்பட்டது. சூரத் மக்களவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. எனவே அந்த தொகுதி தேர்தல் முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்விதலைமையிலான குழு ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT