Published : 21 Apr 2024 05:32 AM
Last Updated : 21 Apr 2024 05:32 AM

முதல்வர் பினராயி விஜயன் பாஜகவுடன் சமரசம்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரளாவின் 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளத்தின் பத்தனம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பேசியதாவது:

லைப் மிஷன் வழக்கு, தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்ட பலஊழல் வழக்குகளில் முதல்வர் பினராயி விஜயனின் பெயர் அடிபடுகிறது. ஆனால் அவருக்கு எதிரான எந்தவொரு வழக்கையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. சோதனை உள்ளிட்ட எந்த ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை.

கால்பந்து விளையாட்டில் சமரசம் செய்துகொண்ட வீரரை வைத்துக் கொண்டு நீங்கள் வெற்றிபெற முடியாது. அதுபோலவே சமரசம் செய்துகொண்ட ஒருமுதல்வரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். எனது சகோதரர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைமட்டுமே அவர் விமர்சிக்கிறார். பாஜகவை விமர்சிப்பதில்லை.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.

கோழிக்கோட்டில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று பேசும்போது,“பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும்டிஎல்எப் தனியார் நிறுவனம்இடையே நில முறைகேடு புகார்உள்ளது. இந்நிலையில் டிஎல்எப்நிறுவனத்தில் சிபிஐ சோதனைநடத்திய பிறகு அந்த நிறுவனம்பாஜகவுக்கு தேர்தல் பத்திரம்மூலம் ரூ.170 கோடி வழங்கியது. இதன் பிறகு டிஎல்எப் நிறுவனம்சட்ட விரோத பரிவர்த்தனை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று நீதிமன்றத்தில் பாஜக அரசு கூறியுள்ளது” என்றார்.

இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக பிரியங்கா புகார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x