Last Updated : 17 Apr, 2018 03:17 PM

 

Published : 17 Apr 2018 03:17 PM
Last Updated : 17 Apr 2018 03:17 PM

‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் பொய் வழக்குகளைப் போட உருவானதுதான் என்.ஐ.ஏ? - முன்னாள் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

 

ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்கிலும் ‘இந்து/காவி பயங்கரவாதம்’ என்ற ஒன்றை சித்தரித்து வழக்குகளை போடுவதுதான் தேசிய விசாரணை ஆணையத்தின் வேலை என்று உள்துறை அமைச்சக முன்னாள் நேருதவிச் செயலர் ஆர்.வி.எஸ் மணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

உண்மையான வழக்கை சிபிஐ கையாண்டது, அதன் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. பிறகு உள்துறை அமைச்சகத்தின் அரசியல் தலைமை வழக்கு விசாரணையை ஒரு மைய விசாரணை அமைப்பிடமிருந்து இன்னொரு விசாரணை அமைப்புக்கு மாற்றியது. அதாவது சிபிஐயிடமிருந்து வழக்கு என்.ஐ.ஏ.விடம் மாற்றப்பட்டது. உண்மையான ஆதாரங்களை இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிலிருந்துதான் காவி பயங்கரவாதம் என்ற கதையாடல் அமலாக்கம் பெற்றது.

முதலில் என்.ஐ.ஏ. வெறும் இந்து தீவிரவாதம், காவி பயங்கரவாதம் என்ற வழக்குகளையே விசாரித்தது. அது இப்படியாக இட்டுக்கட்டி ஒரு சித்திரத்தை உருவாக்கவே நியமிக்கப்பட்ட ஆணையமே தவிர விசாரணை ஆணையம் அல்ல, எந்த ஒரு குண்டுவெடிப்பையும் ‘காவி’ என்பதுடன் தொடர்பு படுத்தக் கூடியவர்கள் இந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்.

“காவி பயங்கரவாதம்’ என்பதன் விதைகள் உள்துறை அமைச்சகத்தில் விதைக்கப்பட்டன. ஆனால் நான் பணியிட மாற்றத்தில் சென்ற பிறகே இது நடந்தது. எனக்கு எந்தவிதமான சுயநலமும் இல்லை அரசிப்பணியை உதறினேன். என் ஓய்வுத் தேதிக்கு 22 மாதங்கள் முன்னதாகவே ஓய்வு பெற்றேன். நான் உண்மையின் பக்கம் நிற்கிறேன். பதவிகளை நோக்கி ஓடுபவர்கள் அரசியல்வாதிகளே, நானல்ல.

காவி பயங்கரவாதம் இந்துத் தீவிரவாதம் என்ற பெயரில் இவர்கள் வழக்கு தொடரலாம், ஆவணங்களை உருவாக்கலாம் ஆனால் உண்மைக்குத்தான் ஆதாரங்கள் இருக்கும். இவர்கள் போட்ட வழக்கெல்லாம் குறுக்கு விசாரணையில் பிசுபிசுத்து விட்டது. இது இப்படித்தான் ஆகும் என்று எதிர்பார்த்ததுதான்.

சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் நேற்று நப குமார் சர்க்கார் என்கிறா சுவாமி அசீமாநந்தா, உட்பட 5 பேரை விடுவித்தது. காரணம் சாட்சியங்கள் இல்லை. என்.ஐ.ஏ அளித்த ஆதாரங்கள் பிசுபிசுத்து விட்டன.

மே 18, 2007-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஹைதராபாத் மெக்கா மசூதியில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 8 பேர் பலியாகி 58 பேர் காயமடைந்தனர். இது இந்து தீவிரவாதிகள் செய்தது என்று பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது தற்போது 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x