Last Updated : 18 Apr, 2018 05:34 PM

 

Published : 18 Apr 2018 05:34 PM
Last Updated : 18 Apr 2018 05:34 PM

உ.பி.யில் ஒரு கிராமத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 25 பேர் கள்ளச்சாராய உயிரிழப்பு

உத்தரப் பிரதேசம் கிராமம் ஒன்றில் மட்டும் கடந்த 12 மாதங்களில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் இறந்துள்ளதாக செய்திஒன்று தெரிவிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ளது தட்டியா கிராமம். இங்கு பலரும் கள்ளச்சாராயத்தை அருந்தியதால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் மனைவி ஏஎன்ஐயிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், '' இந்த கள்ளச்சாராயத்தை குடித்திராவிட்டால் என் கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார். இந்த சுகாதாரமற்ற மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த  வேண்டும்'' என்றார்.

ஆனால் கள்ளச்சாராயம் அருந்தி நிறைய பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை கிராம நிர்வாகம் மறுத்தது.

கண்ணுஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் கூறுகையில், ''அங்கு ஏற்பட்ட மரணங்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. இதுகுறித்து ஆய்வு செய்ய, காவலர்கள் மற்றும் தலைமை மருத்துவ அலுவலரின் அலுவலகத்திலிருந்து ஒரு குழுவும் அக்கிராமத்தை நேரடியாக பார்வையிட்டு அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x