Published : 16 Apr 2024 05:43 AM
Last Updated : 16 Apr 2024 05:43 AM

சனாதனத்தை எதிர்க்கும் திமுகவுடன் கைகோத்தது ஏன்? - காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கேள்வி

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: சனாதன தர்மத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்திருப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 100 நாட்கள் வாக்குறுதியை அளித்தேன். அந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு 100 நாட்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 370-வதுசட்டப்பிரிவு நீக்கப்பட்டது. முத்த லாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

வரும் மக்களவைத் தேர்தலில்பாஜக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்த பிறகு மிகப் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும், மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளேன். இந்த திட்டங்கள், முடிவுகள் நாட்டின் வளர்ச்சி தொடர்பானவை மட்டுமே. இதுகுறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை.

வளர்ச்சி அடைந்த பாரதம்: அண்மையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடினோம். வரும் 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதற்காக அடுத்த 25 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.

சுமார் 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி நமது நாட்டை ஆட்சி செய்திருக்கிறது. நான் கடந்த 10 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி நடத்தி உள்ளேன். நாட்டின் ஒவ்வொரு துறையிலும் இரு ஆட்சி முறைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை நிலவரம் புரியும். காங்கிரஸ் மாதிரி ஆட்சி தோல்வி அடைந்திருக்கிறது. பாஜக மாதிரி ஆட்சி அபார வெற்றி பெற்றிருக்கிறது.

வாரிசு அரசியல்: கடந்த கால ஆட்சியின்போது வாரிசு அரசியலுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்டகுடும்பங்களின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை செலுத்தப்பட்டது. பாஜக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தப்படுகிறது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் எங்களது சாதனைகளை மக்களின் முன்பு பட்டியலிட்டு உள்ளோம். அவர்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

சனாதன தர்மத்தை திமுக எதிர்க்கிறது. அந்த வெறுப்பின் அடிப்படையிலேயே அந்த கட்சி உதயமானது. சனாதனத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்திருப்பது ஏன்? இதற்கானநிர்ப்பந்தம் என்ன? இதுகுறித்து அந்த கட்சிதான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது.

அரசமைப்பு சாசனத்தை பாஜக மாற்றிவிடும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. வேற்றுமையில் ஒற்றுமைகொள்கையை பாஜக முழுமையாகப் பின்பற்றுகிறது.

அமலாக்கத் துறை, சிபிஐ: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ சிறப்பாக பணியாற்றி வருகின்றன. இரு அமைப்புகளும் பதிவு செய்யும் வழக்குகள் தொடர்பான சட்டங்கள் பாஜக ஆட்சியில் இயற்றப்படவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

கறுப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திர நடைமுறையைகொண்டு வந்தோம். ஆனால் மீண்டும் கறுப்பு பண புழக்கத்துக்கே தள்ளப்பட்டிருக்கிறோம். இதுதொடர்பாக நிச்சயம்ஒருநாள் அனைவரும் வருந்துவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது.

பாரத தாய்க்கு சேவை: ஒரு காலத்தில் இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. தற்போது மோடிதான் இந்தியா, இந்தியாதான் மோடி என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, பிரதமர் மோடி அளித்த பதிலில், “பாரதத்தை எனது தாயாகக் கருதுகிறேன். ஒரு மகனாக பாரத தாய்க்கு சேவையாற்றி வருகிறேன். இதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உங்களது ரசிகர் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, “அவர் எனது ரசிகர் கிடையாது, இந்தியாவின் ரசிகர்" என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார்.

ராமர் கோயில்: பிரதமர் மோடி கூறும்போது, ‘‘அயோத்தி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல்ஆயுதமாக பயன்படுத்தி வந்தன. தற்போது அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இனிமேல் இந்த விவகா ரத்தை எதிர்க்கட்சிகளால் எழுப்ப முடியாது.

ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் நட்புறவை பேணி வருகிறேன். இரு நாடுகள் இடையே போர் மூண்டபோது அந்த நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க உதவி கோரினேன். இரு நாடுகளும் உதவி செய்தன. அப்போது மூவர்ண கொடியின் வலிமையை உலக நாடு களால் உணர முடிந்தது. வெளிநாட்டினர்கூட மூவர்ண கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து பாது காப்பாக வெளியேறினர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x