Published : 10 Apr 2018 03:40 PM
Last Updated : 10 Apr 2018 03:40 PM
கேரள மாநிலம் வரப்புழாவில் தற்கொலை வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டவர் நேற்று (திங்கள்கிழமை) உயிரிழந்தார். காவல்நிலையத்தில் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து எர்ணாக்குளம் ஊரக காவல் கண்காணிப்பாளர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில்,
‘‘இம்மரணத்தில் போலீஸ், குற்றவாளி என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் உயிரிழக்கும் முன்பாக, மருத்துவமனையில் அளித்த வாக்குமூலத்தில், சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் ஏதும் கூறவில்லை’’ எனக் தெரிவித்தார்.
மீனவர் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவர் ஸ்ரீஜீத் ஆவார். ஸ்ரீஜித் உட்பட இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது கைதி மரணம் மீதான விசாரணையை எர்ணாக்குளம் போலீஸார் தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT