Published : 12 Apr 2018 08:20 AM
Last Updated : 12 Apr 2018 08:20 AM

திருப்பதியில் சோதனை ஓட்டமாக இலவச பேட்டரி பஸ் சேவை தொடக்கம்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருவதால், காற்றில் மாசு கலப்பதைத் தடுக்க தேவஸ்தானம் சார்பில் ‘தர்ம ரதம்’ என்ற பெயரில் இலவச பஸ் இயக்கப்படுகிறது. ஆரஞ்சு வண்ணம் கொண்ட இந்த பஸ்ஸில் பயணிகள் தங்கும் அறை, பஸ் நிலையம், அன்னதான மையம் மற்றும் பல சுற்றுலா தலங்களுக்கும் இலவசமாக பயணிக்கின்றனர்.

இந்நிலையில், ‘கோல்ட் ஸ்டோன்’ நிறுவனம் தயாரித்த பேட்டரி பஸ்ஸை, தேவஸ்தான போக்குவரத்து பொது மேலாளர் சேஷா ரெட்டி நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் ஒரு வாரத்துக்கு இயக்கப்படும். பக்தர்களுக்கு இது வசதியாக இருந்தால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x