Published : 24 Apr 2018 08:30 AM
Last Updated : 24 Apr 2018 08:30 AM
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து எம்எல்ஏ அனிதா விலகினார்.
திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு உறுப்பினராக விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ அனிதாவை ஆந்திர அரசு நியமித்தது. இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தான் ஒரு எஸ்சி என்றும், இந்து மதத்தவர்தான் என்றும், பல முறை ஏழுமலையானை தரிசித்துள்ளேன் என்றும் அனிதா கூறினார். எனினும் தன்னால், முதல் வர் சந்திரபாபு நாயுடுவுக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதால், அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து வில கிக் கொள்வதாக முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேவஸ் தான அறங்காவலர் குழு உறுப்பினராக, தமிழகத் தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கோரி திருப்பதியில் நேற்று இந்து தார் மீக கமிட்டி சார்பில் திருபப்தி தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதன் தலைவர் ஓம்கார், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசர்களால் கட்டப்பட்ட ஏழுமலை யான் கோயிலுக்கு வரும் பக்தர்களில் 60 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக தமிழகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. பாஜவுடன் கூட்டணி முறிந்துவிட்டது என அறிவித்த முதல்வர், தற் போது மகாராஷ்டிர நிதி அமைச்சரின் மனைவி சப்னாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அறங்காவலர் குழு தலைவ ராக அறிவிக்கப்பட்டுள்ள புட் டாசுதாகர் யாதவ் கூட கிறிஸ் தவ மதத்தை தழுவியவர்தான். அவரை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT