Last Updated : 10 Apr, 2018 04:53 PM

 

Published : 10 Apr 2018 04:53 PM
Last Updated : 10 Apr 2018 04:53 PM

பள்ளிக் கட்டணம் செலுத்த தாமதம்: 4 வயது மாணவரை அடித்த ஆசிரியர் கைது

தெலங்கானா மாநிலம் மீர்பேட்டில் பள்ளிக் கட்டணம் செலுத்த தாமதமான காரணத்தினால் 4 வயது மாணவரை அடித்துக் கொடுமை படுத்தியதற்காக பள்ளியின் ஆசிரியர், முதல்வர், இயக்குநர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மீர்பேட்டில் உள்ளது கிருஷ்ணவேண்டி டேலண்ட் ஸ்கூல் என்ற பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வரும் 4 வயது மாணவர் பள்ளிக்கட்டணத்தை குறித்த நேரத்தில் செலுத்தத் தவறியதற்காக பள்ளியின் ஆசிரியர், முதல்வர், இயக்குநர் ஆகியோர் அவரை அடித்து உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து புகார் பதிவு செய்த காவல்துறை முதல்வர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

“வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பள்ளியின் ஆசிரியர், முதல்வர், இயக்குநர் ஆகியோரைக் கைது செய்துள்ளோம். பள்ளிக் கல்வித்துறைக்கும் சம்பவத்தைப் பற்றி புகார் அளித்துள்ளோம்” என்று மீர்பேட் போலீஸ் உயர் அதிகாரி மன்மோகன் தெரிவித்தார்.

ஆசிரியர் ஸ்வரூபா குச்சியால் மாணவரை அடித்ததாக பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x