Published : 06 Apr 2024 04:48 AM
Last Updated : 06 Apr 2024 04:48 AM
பெங்களூரு: பெங்களூருவில் ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரிக்கின்றனர்.
சிசிடிவி கேமரா பதிவின் மூலம் குண்டு வைத்த குற்றவாளி முசாவிர் சாஹிப் எனஅடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தை தீட்டிய நபர் அப்துல் மதீன் தாஹா என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர்கள். இந்த இருவர்தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தேவையான பொருட்களை வாங்கித் தந்த முஷம்மில் ஷெரீப்பை கடந்த 26-ம் தேதிஎன்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் கைது செய்தனர். அவர் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர். மேலும், அவரை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தீர்த்தஹள்ளியை சேர்ந்தபாஜக பிரமுகர் சாய் பிரசாத்என்பவரை என்ஐஏ அதிகாரிகள்கைது செய்ததாக கன்னட ஊடகங்களில் நேற்று புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின.செல்போன் கடை வைத்திருக்கும் சாய் பிரசாத்துக்கு அதேஊரை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான முசாவிர் சாஹிப், அப்துல் மதீன் தாஹாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.
என்ஐஏ நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறியிருப்பதாவது: இவ்வழக்கில் தகவல்களை சேகரிக்க முக்கிய குற்றவாளிகளின் பள்ளி, கல்லூரி, ஊர் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகிறோம். பாஜக பிரமுகரை கைது செய்யவில்லை
இந்த வழக்கு தீவிரவாத சம்பவத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் விசாரணை செய்யப்படும் நபர்களின் அடையாளம் குறித்து தெரிவிக்கஇயலாது. உறுதி செய்யப்பட்டதா இதுபோன்ற செய்திகள் இவ்வழக்கில் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைகின்றன. தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு என்ஐஏ கேட்டுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT