Published : 06 Aug 2014 09:25 AM
Last Updated : 06 Aug 2014 09:25 AM

இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவில் இரட்டை நிலைப்பாடு இல்லை: ராகுல் காந்தி விளக்கம்

இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவில் இரட்டை நிலைப் பாட்டை காங்கிரஸ் கடைப்பிடிக்க வில்லை என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட் டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இதுதொடர்பாக கடந்த திங்கள் கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை.

இதுகுறித்து மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லி கூறிய போது, கடந்த காங்கிரஸ் ஆட்சி யில் கொண்டுவரப்பட்ட இன் சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா தான் தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த அவர், இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது: இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவை காங்கிரஸ் கொண்டு வந்தபோது அதனை பாஜக கடுமையாக எதிர்த்தது. 6 ஆண்டுகளாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றவிடவில்லை. இப்போது வெறும் 6 வாரங்களில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசு அதிகார தோரணையில் உத்தரவிடுவதை ஏற்க முடியாது.

மசோதாவை நாங்கள் ஆதரிக் கிறோம். அதேநேரம் நாடாளு மன்ற நடைமுறைகள் பின்பற்றப் பட வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளோம். முதலில் மசோதாவை தேர்வுக் குழு பரிசீல னைக்கு அனுப்ப வேண்டும் என்றார் அவர்.

சமாஜ்வாதி எதிர்ப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியபோது, இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவை தீவிரமாக எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x