Published : 29 Mar 2024 10:38 AM
Last Updated : 29 Mar 2024 10:38 AM
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கையை குடியரசுத் தலைவர் சார்பில் தேர்தல் ஆணையம் நேற்று காலையில் வெளியிட்டது.
இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாளாகும். ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 6-ம் தேதியும் மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 5-ம் தேதியும் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அசாம், பிஹார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ம.பி., ராஜஸ்தான், திரிபுரா, உ.பி. மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 88 தொகுதிகள் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
இவற்றுடன் வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் எஞ்சிய பகுதிகளிலும் அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி மட்டும் இருகட்ட தேர்தலை சந்திக்கிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப்ரல் 19-ம் தேதியும் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT