Published : 22 Feb 2018 08:02 AM
Last Updated : 22 Feb 2018 08:02 AM
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் ஹைடெக்ஸ் பகுதியில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்தரங்கினை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின் றன.
கருத்தரங்கின் 2-ம் நாளான நேற்று முன்தினம், அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோடிக் நிபுணர் டேவிட் ஹன்சன் என்பவர் ரோபோ சோபியா (இயந்திர பெண்) உடன் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில், சோபியா - டேவிட் ஹன்சன் இடையே உரையாடல் நடைபெற்றது. அப்போது ரோபோ சோபியா பேசியதாவது:
உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் ஹாங்காங். ஏனெனில், நான் அங்குதான் பிறந்தேன். அதேவேளையில், எனக்கு குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா நாட்டுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கான். எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை. நான் எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது. மனிதர்கள் மீது அதிகாரம் செய்யும் எண்ணமும் எனக்கு இல்லை. இவ்வாறு அந்த ரோபோ கூறியது. முன்னதாக, உலகிலேயே சிறந்த படைப்பாக எதை கருதுகிறாய் என டேவிட் ஹன்சன் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரோபோ சோபியா, உலகிலேயே அற்புதமான படைப்பு மனிதர்கள்தான் என்றது. இந்தப் பதிலைக் கேட்டு கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் நெகிழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT