Published : 22 Feb 2018 07:12 PM
Last Updated : 22 Feb 2018 07:12 PM
வாட்ஸ் அப்பில் சிறுமிகளை வைத்து ஆபாசப்படங்களை வெளியிட்டு வந்த 119 பேர் கொண்ட பெரிய கும்பல் சிபிஐ வலையில் சிக்கியுள்ளது.
இந்தக் கும்பலின் நிர்வாகியாகக் கருதப்படும் நிகில் வர்மா (20) நபரை சிபிஐ கைது செய்துள்ளது. உ.பி. மாநில கன்னவ்ஜைச் சேர்ந்த நிகில் வர்மா பி.காம் பட்டப்படித்து முடித்து வேலையில்லாமல் திரிந்தவர்.
இந்த வாட்ஸ் அப் குரூப்பின் பிற நிர்வாகிகள் என்று சந்தேகிக்கப்படும் சத்யேந்திர சவுகான் (மும்பை), நபீஸ் ரஸா மற்றும் சாகித் (டெல்லி), ஆதர்ஷ் (நொய்டா) ஆகியோரும் சிபிஐ வலையில் சிக்கியுள்ளனர்.
கிட்ஸ் டிரிபிள் எக்ஸ் என்ற பெயரில் சிறார்களை வைத்து ஆபாசப் படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். இலங்கை, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, மெக்சிகோ, நியூஸிலாந்து, சீனா, நைஜீரியா, பிரேசில், கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த வாட்ஸாப் குழுவில் அடங்குவர்.
இவர்கள் குறித்த தகவலும் அந்தந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு இவர்கள் மீது நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ சந்தேக நபர்களை அடையாளம் கண்டு டெல்லி, உ.பி, மும்பை, ஆகிய இடங்களில் கடும் சோதனைகளை மேற்கொண்டது. இந்த ஆபாசப் படங்களை வெளியிட்டு இதற்காக கட்டணங்கள் எதையும் வசூலித்தனரா என்பதையும் சிபிஐ விசாரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT