Published : 17 Mar 2024 05:25 AM
Last Updated : 17 Mar 2024 05:25 AM
புதுடெல்லி: அனைத்து மாநில தலைமைசெயலர்கள், டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் நக்சல் பாதிப்பை கண்காணிக்கும் பிரிவு அனுப்பியுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: நக்சல் பாதிப்பு மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நக்சல் பாதிப்பு மாவட்டங்களுக்கான பாதுகாப்பு தொடர்பான செலவின திட்டத்தை உள்துறை அமைச்சகம் 2021-ம் ஆண்டு ஆய்வு செய்தபோது, நாட்டில் 10 மாநிலங்களில் 72 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்தது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த எண்ணிக்கை 58 ஆக குறைந்துள்ளது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த மாவட்டங்களுக்கு தேசிய கொள்கை மற்றும் செயல்திட்டத்தின் கீழ் பல மானியங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. நக்சல் பாதிப்பின் தன்மைக்கேற்ப பல பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT