Published : 13 Aug 2014 09:30 AM
Last Updated : 13 Aug 2014 09:30 AM

ஆந்திராவின் தற்காலிக தலைநகரம் விஜயவாடா

ஆந்திர மாநிலத்தில் நிரந்தர புதிய தலைநகரம் அமைக்கும் வரை தற்காலிகமாக விஜய வாடாவை புதிய தலைநகரமாக அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங் கானா, சீமாந்திரா என இரண்டாக பிரிந்த நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக செயல் பட்டு வருகிறது. இதில் பல பிரச்சினைகள் தலைதூக்கி வருவதால் விரைவில் ஆந்திரத் தின் புதிய தலைநகரை அமைக்க ஆந்திர அரசு முனைந்து வருகிறது.

இதனிடையே மத்திய அரசு நியமனம் செய்த சிவ ராம கிருஷ்ணன் கமிட்டி, ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரு கிறது. இக்கமிட்டி வரும் 20-ம் தேதிக்குள் மாநிலத்தின் புதிய தலைநகருக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. ஏறக் குறைய விஜயவாடா-குண்டூர் இடையேதான் புதிய தலைநகர் அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவராம கிருஷ்ணன் கமிட்டி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மாவட்டங்களில் பலர் தங் களது மாவட்டத்தையே புதிய தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட தங்களது மாவட்டத்தில் தலைநகர் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்து வரு கின்றனர். மாநில அமைச்சர் களும் தினமும் தலைநகர் குறித்து ஒவ்வொரு விதமாக அறிக்கை விடுத்து வருவது முதல்வரை சங்கடத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

இதனால் திங்கள்கிழமை நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், மாநில புதிய தலைநகர் குறித்து முதல்வர் நாயுடு பேசுகையில், ‘நான் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவன். எனக்குகூட சொந்த மாவட்டம் மாநில தலைநகராக அமைய வேண்டும் என்கிற கருத்து இருக்கலாம். ஆனால், மாநிலத்தின் மையத்தில் பிரம் மாண்டமான முறையில், புதிய தலைநகர் அமைய வேண்டும் என கருதுகிறேன். ஆதலால் இனி புதிய தலைநகரம் குறித்து அமைச்சர்கள் பேச வேண்டாம்’ என கண்டிப்புடன் கூறி விட்டார்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை ஹைதராபாதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் புதிய தலைநகர் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. இதில் நிரந்தர தலைநகரம் அமையும் வரை தற்காலிக தலைநகர் அமைக்க வேண்டும் என முதல்வர் கருத்து தெரிவித்தார். இதற்கு ஆலோசனைக் குழு வும் சம்மதம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, விஜய வாடாவை தற்காலிக தலைநகர மாக வைத்து செயல்பட தேவை யான அரசு கட்டிடங்கள் குறித்து உடனடியாக தகவல் தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சில அதிகாரிகள் விஜயவாடா விரைந் தனர். முதலில், நீர்வளத்துறை, மீன்வளத்துறை, கல்வித்துறை போன்ற அலுவலகங்கள் இயங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஆந்திர அரசின் அனைத்து துறைகளும் விஜய வாடாவில் இயங்க உள்ளன.புதிய தலைநகரை முழுமையாக அமைக்கும் வரை விஜயவாடா தற்காலிக தலைநகரமாக விளங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x