Published : 02 Feb 2018 05:39 PM
Last Updated : 02 Feb 2018 05:39 PM
ராஜஸ்தான் இடைத் தேர்தல் முடிவுகள் டிரெய்லர் தான் உண்மையான படம் 2019ம்ஆண்டு வெளியாகும் என மத்தியில் ஆளும் பாஜகவை சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 29-ம்தேதி நடந்த ஆல்வார், அஜ்மீர் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மண்டல்கார்க் சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது, ஆனால், 3 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.
இது குறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவு என்பது ஒரு டிரைவர்தான் , ராஜஸ்தானில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் என்பது டிரைலர் முடிந்து இடைவேளை விடுவது போன்றது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கலாம்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா கட்சி தனியாகச் சந்திக்கும். பாஜகவுடன் எந்தவிதமான கூட்டணிக்கும் இடமில்லை.
வில்லில் இருந்து ஒருமுறை அம்பு எய்துவிட்டால் திரும்பவும் வராது. மத்திய பட்ஜெட்டைப் பொறுத்தவரை காகிதத்தில் பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், நடைமுறைப்படுத்தும் போதுதான் அதன் வெற்றி குறித்து தெரிந்துகொள்ள முடியும்
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT