Published : 08 Feb 2018 07:16 AM
Last Updated : 08 Feb 2018 07:16 AM
பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்துக்கு அநீதி இழைத்ததாக, மத்திய அரசை கண்டித்து இன்று ஆந்திர மாநிலத்தில் பந்த் நடத்த இடதுசாரிக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு காங்கிரஸ், ஜனசேனா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளதால் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
மத்திய அரசு தாக்கல் செய்த 2018-19 வருவாய் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு இன்று ஆந்திர மாநில பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. மேலும், போலாவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கான நிதி, கடப்பா இரும்பு தொழிற்சாலைக்கான நிதி, மாநில பிரிவினை மசோதாவில் உறுதியளித்தபடி சிறப்பு நிதிகள் யாவும் அறிவிக்கப்படவில்லை.
இதனால் பாஜக-வின் தோழ மை கட்சியும் ஆளும்கட்சியு மான தெலுங்கு தேசம் கட்சி தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இக்கட்சியின் எம்பிக்கள் தொடர்ந்து 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுங்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய கட்சி எம்பிக்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதனால் நாளுக்கு நாள் அவர்கள் போ ராட்டத்தை நாடாளுமன்றத்தில் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி இன்று இடதுசாரிக் கட்சிகள் ஒரு நாள் அடையாள பந்த் நடந்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பந்த்துக்கு காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜனசேனா, லோக் சத்தா உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இன்று ஆந்திராவில் பஸ், லாரி, ஆட்டோக்கள் இயங்காது. பெட்ரோல் பங்க்குகள், திரையரங்குகள் மூடப்படுமென இதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடைகள், வணிக வளாகங்களும் மூடப்படும் என வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்காததை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எதிர்த்தாலும் பந்த் போராட்டத்தின்போது மாநிலத் தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முழு பாதுகாப்புக்கு ஏற் பாடு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT