Published : 07 Aug 2014 09:06 AM
Last Updated : 07 Aug 2014 09:06 AM

தூக்கு கைதியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்: 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவர்

மூன்று வயது சிறுமியை பலாத் காரம் செய்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி அனுப்பி இருந்த கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் 2007-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தை செய்ததாக ராஜேந்திர பிரால்ஹத் ராவ் வாஸ்னிக் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு நீதிமன்றம் வழங் கிய தூக்குத் தண்டனையை 2012ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக்,ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.

வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டுள்ள நபர் செய்த குற்றம் மிக மிக கொடூரமானது

திருமணமான 31 வயது நபர், பிஸ்கட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கு ஜூலை 31-ம் தேதி வாஸ்னிக் கருணை மனுவை அனுப்பினார். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் கூறிய ஆலோசனையை ஏற்ற குடியரசுத் தலைவர் மனுவை நிராகரித்தார்.

நிதாரி கொலை வழக்கு குற்ற வாளி சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் நிராகரித்தார். கடந்த 2 ஆண்டுகளில் 29 பேரை உள்ளடக்கிய 22 மரண தண் டனை உத்தரவுகளுக்கு குடி யரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அத்பீர் என்பவரின் விவகாரத் தில் மட்டும் அவரது மனுவை ஏற்று அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுளாக குறைக்க உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

சொத்துச் சண்டையில் 3 உறவினர்களை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அத்பீருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கு குற்றவாளி முகம்மது அஜ்மல் கசாப், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அப்சல் குரு உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவின்கீழ் ஏதாவது குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கவோ அல்லது மன்னிக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் தரப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x