Published : 12 Mar 2024 03:39 PM
Last Updated : 12 Mar 2024 03:39 PM
ஜெய்சால்மர்: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவர்கள் விடுதி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. நல்வாய்ப்பாக விமானி பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானம் ஜெய்ஸால்மர் அருகே விபத்துக்குள்ளானது. பயிற்சியின் போது எதிர்பாராமல் இந்த விபத்து நடந்துள்ளது. விமானி பத்திரமாக உயிர் தப்பினார். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
One Tejas aircraft of the Indian Air Force met with an accident at Jaisalmer, today during an operational training sortie. The pilot ejected safely.
A Court of Inquiry has been constituted to find out the cause of the accident.
தேஜஸ் விமானம், அனைத்து காலநிலையிலும் இயங்கக் கூடிய 4.5 தலைமுறை விமானம். இதில் நவீன போர் விமானங்களில் உள்ள அட்வான்ஸ்ட் கிளாஸ் காக்பிட், டிஜிட்டல் ஏவியானிக்ஸ் கருவிகள் உள்பட பல வசதிகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT