Published : 12 Mar 2024 11:17 AM
Last Updated : 12 Mar 2024 11:17 AM
மேற்குவங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ்சார்பில் மக்களவை தேர்தலில்சத்ருகன் சின்ஹா களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2022-ல் மேற்கு வங்க இடைத்தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மீண்டும் அவரை வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்திருப்பது குறித்து பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: சினிமாவிலும் நிஜத்திலும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களால் நிரம்பிவழியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அசன்சோல் தொகுதி வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவை பாருங்கள்.
சர்வதேச மகளிர்தினத்தன்று பெண்களின் சக்தியை வெளிப்படுத்த மம்தா பானர்ஜி நடத்திய அணிவகுப்பில் இவரை அழைக்காமல் விட்டுவிட்டார்களே என நினைக்கும்போதுதான் ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு பதிவிட்டு உடன் சத்ருகன் சின்ஹா நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றையும் அவர் பதிவேற்றியிருந்தார்.
இந்த பதிவை ஒட்டி தனது விமர்சனத்தையும் முன்வைத்த மேற்குவங்க பாஜக மாநில செயலாளர் பிரியங்கா திப்ரேவால் கூறியிருப்பதாவது: எப்படிப்பட்டவர்களை வேட்பாளர்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்வு செய்கிறது பாருங்கள். அவர்களது பட்டியலில் உள்ள நிஜவாழ்க்கை ஹீரோக்களையும் சினிமா ஹீரோக்களையும் ஒப்பிட்டால் அது புரிந்துவிடும்.
சந்தேஷ்காலியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த ஷாஜகான் போன்றவர்கள்தான் திரிணமூலின் நிஜவாழ்க்கை ஹீரோக்கள். அப்புறம் சொல்லவேதேவையில்லை சினிமாவில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் சத்ருகன் சின்ஹா போன்றவர்கள் அவர்களுடைய சினிமா ஹீரோக்கள்.
இனியும் தொடரும்... திரிணமூலின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோர் இதுபோன்று கறைபடிந்தவர்களே. அவர்கள் மீதுதொடுக்கப்பட்ட வழக்குகள் பலஇன்னும் நிலுவையில் இருக்கின்றன.
நாடாளுமன்றத்தைவிட்டே வெளியேற்றப்பட்ட மஹுவா மொய்த்ரா போன்றோரை அக்கட்சி இம்முறையும் வேட்பாளராக நிறுத்துகிறது. இனிவரும் காலத்திலும் இது போன்றவர்களைதான் அந்த கட்சி முன்னிறுத்தும் இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT