Published : 08 Mar 2024 03:29 PM
Last Updated : 08 Mar 2024 03:29 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோட்டா நகரில் மகா சிவராத்திரி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 14 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஹீராலால் நகர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம். இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயமும், மற்றொரு குழந்தைக்கு 50 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளுக்கு 50 சதவீதத்துக்கும் கீழ் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
முதல்கட்ட விசாரணையில், உயர் அழுத்த மின் கம்பியுடன் ஏற்பட்ட உராய்வில் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜஸ்தான் அமைச்சர் ஹீராலாலும் குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT