Published : 08 Mar 2024 05:46 AM
Last Updated : 08 Mar 2024 05:46 AM
புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு திட்டக்குழுவைகலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன் னெடுத்துச் செல்வதற்கான கொள்கைகளை பரிந்துரை செய்யும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலங்கள் முக்கிய துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க உதவும் வகையில் ‘NITI for States’ என்ற புதிய தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தொடங்கி வைத்தார்.
வேளாண், கல்வி, எரி ஆற்றல், சுகாதாரம், திறன் மேம்பாடு, உற்பத்தி, சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு, நீர் மேலாண்மை, சிறு, குறு தொழில்நிறுவனங்கள் உள் ளிட்ட 10 துறைகள் தொடர்புடைய 7,000 சிறந்த நடை முறைகள், 5,000 கொள்கை ஆவணங்கள், 900 தரவுத் தொகுப்புகள் உட்பட முக்கிய விவரங்கள் இந்தத் தளத்தில் உள்ளடங்கி இருக்கும்.
ஒவ்வொரு மாநிலமும் ஏனைய மாநிலங்களின் போக்குகளை அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப தங்கள் மாநிலத்தில் கொள்கைகளை உருவாக்குவ தற்கும் இந்தத் தளம் பயனுடையதாக இருக்கும் என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT